கொழும்பு – யாழ்ப்பாண ரயில் சேவை அடுத்த மாதம்  15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம்  15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து  காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிதி உதவியுடன்  வடக்கு ரயில் மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு  மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 15  ஆம் திகதி வடக்கு  ரயில் சேவையை  மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசன பதிகள் உள்ளிட்ட மேலதிக  விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடல்களின் பின்னர்  இறுதி முடிவு எட்டப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்  சமன் பொல்வத்தகே  தெரிவித்தார்.
 

Spread the love