சர்வதேசக் கட்டமைப்புக்களுடன் இணைந்து இலங்கைக்கு உதவி- அமெரிக்கத் தூதுவர்

சர்வதேசக் கட்டமைப்புக்களுடன் இணைந்து இலங்கைக்கு முடிந்த உதவிகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

இலங்கையில் உயர் அதிகாரிகளை தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் ஜூலி சங், நேற்றுமுன்தினம் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்குமென அமெரிக்கத் தூதுவர் இந்தச் சந்திப் பில் மேலும் தெரிவித்தார்.

Spread the love