நாட்டில் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைப்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூன்று ஆர்வலர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
இதில் விசாரணையின்றி ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்க முடியும். பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட உரிமைகளை நசுக்கியுள்ளார். விதைகள், கிருமி நாசினிகள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் அந்த மக்கள் ஏன் அந்தக் காணிகளில் விவசாயம் செய்யவில்லையென ஜனாதிபதி ஆராய வேண்டுமே தவிர விவசாயம் செய்யாத காணிகளை மீளப்பறிக்க வேண்டுமென்ற கொள்கை முற்றிலும் மக்களுக்கு விரோதமானது.
வடமாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் அந்த மக்கள் ஒரு ஏக்கர் இரு ஏக்கர் காணிகளை பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் அலைந்திருப்பார்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விவசாயம் செய்யாத காணிகளை ஏன் அதில் விவசாயம் செய்யவில்லை என்பதனை அறிந்து அவர்கள் விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை அரசு செய்யவேண்டுமே தவிர அவர்களின் காணிகளை பறிக்கக் கூடாது. எனவே அவர்களின் காணிகளை பறிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என்றார்.