கொழும்பின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலிலேயே கேலிக்கூத்தாக இருந்த அரசு அதை மாற்றிக் கொள்வது நல்லது. இது போன்ற சிந்தனையற்ற முடிவுகளும், நடவடிக்கைகளும் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022-10-03