சீனத் தூதுவர் மீது இந்தியா கடும் சாடல் 

இலங்கைக்கு ஆதரவே தேவை இன்னொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலிற்கு சேவையாற்றுவதற்கான தேவையற்ற அழுத்தங்களோ சர்ச்சைகளோ அவசியமில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சீனத் தூதுவரின் சமீபத்தைய கருத்து குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்தப் பதிவில், நாங்கள் சீனத் தூதுவரின் கருத்தினை அவதானித்துள்ளோம் அடிப்படை இராஜதந்திர இங்கிதத்தை  ஒழுங்கு முறையை மீறுவது அவரின் தனிப்பட்டபண்பாக இருக்கலாம் அல்லது பாரிய தேசிய அணுகுமுறையை பிரதிபலிப்பதாகயிருக்கலாம் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடபகுதி அயல்நாடு பற்றிய சீன தூதுவரின் பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை அடிப்படையாக கொண்டதாகயிருக்கலாம், என தெரிவித்துள்ள தூதரகம் இந்தியா மிகவும் வித்தியாசமானது என உறுதியளிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலின் வருகைக்கு அவர் புவிசார் அரசியல் சூழமை மையப்படுத்தி கருத்து தெரிவிக்கின்றார், என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயம் ஒளிவுமறைவு மற்றும் கடனை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிநிரல் பாரிய சவாலாக மாறியுள்ளது குறிப்பாக சிறிய நாடுகளிற்கு சமீபத்தைய நிகழ்வுகள் ஒரு முன்னெச்சரிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Spread the love