சீனாவின் விண்வெளி செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் யுவான்வாங் 5 (“Yuan Wang 5) இந்தியப் பெருங்கடலில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்துவதற்கு ஆகஸ்ட் 11 அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழையவுள்ளதான செய்தியைத் தொடர்ந்து, இந்தியா தனது தென் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையை இலக்காக கொண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த சீன கப்பல் வருவது இந்தியாவில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘த எக்னாமிக் டைம்ஸ்’ செய்தி சேவை தெரிவித்துள்ளது. இந்த சீனக் கப்பல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்பில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்பு ஆகியவற்றிற்காக கப்பல் தனது செயற்கைக்கோள் தொலைக்காட்சி அமைப்பை இயக்க முடியும். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறானதொரு சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.