இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் விலை நேற்று (25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,850 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் கட்டட நிர்மாணத்திற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் நிர்மாணப்பணிகள் 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப்பணிகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கியூப் மணலின் விலை 8000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கத்தின் தலைவர் M.D.போல் குறிப்பிட்டார். இரும்புக் கம்பிகளின் விலை இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக M.D.போல் சுட்டிக்காட்டினார்.