பாராளுமன்ற நிலையியற் கட்டளையை ரத்துச்செய்து ஜனாதிபதியின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 51 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
சுமந்திரன் எம்.பியால் கொண்டுவரப்பட்ட இந்த யோசனைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்து எதிரணியில் அமர்ந்துள்ள எம்.பிகளும் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.