டயலொக் 3G இணையத்தள சேவையை (2023) முடிவுக்கு கொண்டு வர தீர்மானம் 4G சேவைக்கு மாறுமாறு கோரிக்கை

டயலொக் தொலைபேசி சேவை 3G இணையத்தள சேவையை அடுத்த வருட ஆரம்பத்துடன் (2023) முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. 4G இணையத்தள சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் டயலொக் தொலைபேசி வலையமைப்பு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 4G சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு சிறந்ததொரு தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் கூறுகின்றது.

டயலொக் வலையமைப்பில் 3G இணையத்தள சேவையை ஒரு சதவீதத்திற்கும் குறைவானோரே தற்போது பயன்படுத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.

3G சேவையை நிறுத்தி, அதற்கு பதிலாக 4G சேவையை உயர் தொழில்நுட்பத்தின் ஊடாக வழங்க முடியும் என டயலொக் நிறுவனம் தெரிவிக்கின்றது. டயலொக் 3G சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, 4G சேவைக்கு மாறுமாறு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Spread the love