தங்காலை-கால்டன் அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; கைதான 12 சந்தேகநபர்களுக்கு பிணை

தங்காலை – கால்டன் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு இன்று(05) அதிகாலை பிணை வழங்கப்பட்டுள்ளது.

தங்காலை பதில் நீதவான் முன்னிலையில் இன்று(05) அதிகாலை ஒரு மணியளவில் சந்தேகநபர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, பொது சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பஸ் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்தியமை, பொலிஸ் அதிகாிகளுக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சார்பாக 18 சட்டத்தரணிகள் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

Spread the love