அடுத்த மாதம் முதல் தமது எல்லைகளை மீள திறக்கவுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட தமது எல்லைகளை சுமார் 2 வருடங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக மீள திறக்கவுள்ளது.
அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் தனிமைப்படுத்தலின்றி நாட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா தள்ளுபடி பெற்ற பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளைச் சேர்ந்த முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்படுகின்றது. உலக மக்களை மீண்டும் வரவேற்க தயாராகவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) கூறியுள்ளார்.