ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர், மனித உரிமை பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் நீதிகோரும் போராட்டம் இடம் பெற்றது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் இடம் பெற்றிருந்தது. இந்தப் போராட்டத்தில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ஒரு இனப்படுகொலை குற்றவாளி எனவும் இலங்கை அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவேண்டும் என்பது போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டன.