தமிழ் கட்சிகளின் கூட்டு கடிதம் கையளிப்பு பிற்போடப்பட்டது!

இந்தியா பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள், இணைந்து உருவாக்கிய கடிதம், இன்று மாலை 6 மணிக்கு, குறித்த கட்சிகளின் தலைவர்கள் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில், கடிதம் கையளித்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை தயாரித்த கட்சிகள், இன்று காலை வேளையில் கையொப்பமிடலை நிறைவு செய்து ஆவணத்தை மாலை வேளையில் கையளிக்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால் இந்திய தூதுவர் கோபால் பாக்லே திடீரென இந்தியா, புது டெல்லிக்கு செல்வதாகவும், அதன் காரணமாக சந்திப்பை பிற்போடுவதாகவும், இந்திய பயணத்தை தூதுவர் நிறைவு செய்து வந்ததும், எதிர்வரும் வாரம் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love