திரிபோஷா நிறுவனத்திடமிருந்து சுகாதார அமைச்சிற்கு அறிக்கை

திரிபோஷா குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரிபோஷா நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்று அதன் தலைவரினால் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள விடயங்களின் அடிப்படையில் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷாக்களை பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமலீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரிபோஷா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தாய்மார்கள் வினவுவதன் காரணமாக, சுகாதார அமைச்சு இதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டுமென குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட திரிபோஷாக்களை மீள பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

Spread the love