நாட்டில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவியை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை என்பது உரிமையோ, பரிசோ அல்ல, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் கூறிய பேராசிரியர், ஜனநாயகம் தர நிலையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தத் தரவுகள் பாராளுமன்ற நிதிக் குழுவிற்கு வெளிப்படுத்தப்படவில்லையென்றாலும், மேற்படி தரவுகள் வேறு நபர்களிடம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல். எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.