தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா(Ghattamaneni Siva Rama Krishna Murthy) தமது 79ஆவது வயதில் இன்று(15) காலமானார். மாரடைப்பு காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
திரைத்துறையை சேர்ந்தவர்கள் நடிகர் மகேஷ் பாபுவிற்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட கிருஷ்ணா, தெலுங்கு திரையில் 350இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபுவின் சகோதரன்(ரமேஷ் பாபு) மற்றும் செப்டம்பர் மாதத்தில் தாய் ஆகியோரும் உயிரிழந்தனர்.