அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி,குறித்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து அரசு நிறுவனங்களும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் தவிர, அதிக அளவில் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அனைத்து தகவல்களும் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.