நீர்த்தேக்கங்கள் நிறைவதால் மின்தடை நேரம் குறையலாம்

மழையுடனான காலநிலை நீடிப்பதால், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களில், நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.

அதனால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்தடை நேரத்தை எதிர் காலத்தில் குறைக்கமுடியும் என்று மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், தற்போது 50 வீதமளவில் உயர்வடைந்துள்ளது. நீர்மின் உற்பத்தி மூலம் கடந்த வாரம் 210 ஜிகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கப்பெற்றது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தால், மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்கமுடியும். அதேவேளை புதுப்பிக்கப்பட்ட சக்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்து சுமார் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப்பணிகள் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது என்று மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார். 

Spread the love