பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ். நகரில் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய், தமிழினப் படுகொலைக்கான சர்வதேசநீதி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே ஸ்ரீலங்கா அரசுக்கு இனியும் கால அவகாசம் வேண்டாம். சர்வதேசமே நாம் அழுவது கேட்க வில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே?, இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும், ஐ.நா. அமைதிப்படை இலங்கைக்கு வர வேண்டும், கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது. வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி. வேண்டாம், விடுதலை செய் விடுதலை செய் அரசியல்கைதிகளை விடுதலை செய் உள்ளிட்ட பதாகைகளை ஏந்திவாறு கோஷங்களை எழுப்பிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.