12 ஆண்டுகளின் பின் கிடைத்த நீதி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நிரபராதி என கொழும்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் 2010ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடு தலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனைப்படி, இறுதிப்போர் நடந்த காலகட்டத்தில் கொழும்பில் இவர் நிதி சேகரித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கின் எதிரியான ராஜசேகர் சார்பில் சட்டத்தரணி தர்மராஜாவின் ஆலோசனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா மன்றில் முன்னிலையானார். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா மன்றில் முன்வைத்த வாதங்களை அடுத்து, எதிரி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து, நீதிமன்று சந்தேகநபரை விடுதலை செய்துள்ளது.

Spread the love