தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் புன்னை நீராவி நாதன் திட்டம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு புனரமைப்பு பணிக்கென ரூபா மூன்று இலட்சம் ரூபாயும் தட்டுவன் கொட்டி அம்பிகை வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தண்ணீர் பம்பி மற்றும் கதிரை என்பவனவும் கன்னகிநகர் அம்பிகை விளையாட்டுக் கழகத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் விளக்குகளும் தருமபுரம் இளந்தாரகை விளையாட்டுகழகத்தினருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ராஜ் வினோத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் தவபாலன் உதவி பிரதேச செயலாளர் துவாரகா கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாடசாலையின் அதிபர் ஆலய நிர்வாக சபையினர் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்