பாராளுமன்றத்தில் இன்று(04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் பிரதமரின் இன்றைய உரை இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று(03) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று(04) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.