பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவர், பிரதமரின் வங்கி கணக்கில் பண மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சம்பளம் வைப்பிலிடும் வங்கி கணக்கிலிருந்து ATM மூலமாக இந்த திருட்டு சம்பவத்தை பெயர் வெளியிடப்படாத அந்த நபர் செய்துள்ளார்.
குறித்த செயலாளர் பிரதமர் அலுவலகத்தில் செயலாளர் பதவிக்கு கடந்த வருடம் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்திலும் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது வங்கி கணக்குக்கு வைப்பிலிடப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கோடி கணக்கிலான பணத்தினை இவர் கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. பணவிபரம் தொடர்பில் உத்தியோகபூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.