எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் அமருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துடன் கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் ஒரு அதிர்வலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவார் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அப்படியானால், நாட்டின் அரச தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.