அமெரிக்க குழந்தை ஒருத்தி ஹாலோவீன் பண்டிகையின் போது பிரித்தானிய மகாராணி யாரைப் போலவே அச்சு அசலாக உடை உடுத்தியிருந்தாள். அந்த விடயம் மகாராணியாரை நெகிழ வைத்ததைத் தொடர்ந்து. ஹாலோவீன் பண்டிகையின் போது தன்னைப் போல உடை உடுத்தியதற்காக நன்றி தெரிவித்து அந்தக் குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மகாராணியார்.
குழந்தை ஒன்று ஹாலோவீன் பண்டிகையின் போது, பிரித்தானிய மகாராணியாரைப் போலவே உடை உடுத்தி வலம்வர அவளைப் பார்த்தவர்கள், தலைகளைத் தாழ்த்தி, மகாராணியார் வாழ்க என்று வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தக் காட்சிகளை புகைப்படம் எடுத்த குறித்த குழந்தையின் தாய் ஒரு கடிதம் எழுதி, அதனுடன் இந்தப் புகைப்படங்களையும் இணைத்து அவற்றை பக்கிங்காம் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால், மகாராணியாரிடமிருந்து தனக்கு கடிதம் வரும் என அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மகாராணியார். குழந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு கடிதம் எழுதியதற்காக நன்றி தெரிவித்துள்ள மகாராணியார். குழந்தையின் புகைப்படம் தன்னை மகிழச்சி அடைய செய்ததாக தெரிவித்துள்ளதுடன், அந்தக் குடும்பத்துக்கு தனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.