புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் முன்னிலையில் பதவிப் பிரமாணம்

இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று(08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 37 இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது பதவியேற்றுள்ளனர்.

வர்த்தக இராஜாங்க அமைச்சராக எஸ். வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக அரவிந்த குமார் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று(08) பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஏனைய 32 இராஜாங்க அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல்:

  1. ரஞ்சித் சியம்பலாபிட்டி – நிதி
  2. லசந்த அழகியவண்ண – போக்குவரத்து
  3. திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
  4. கனக ஹேரத் – தொழில்நுட்பம்
  5. ஜனக்க வக்கும்பர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்
  6. செஹான் சேமசிங்க – நிதி
  7. மொஹான் பிரியதர்ஷன யாப்பா – விவசாயம்
  8. தேனுக்க விதான கமகே – நகர அபிவிருத்தி
  9. பிரனித்த பண்டார தென்னக்கோன் – பாதுகாப்பு
  10. ரோஹண திசாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
  11. அருந்திக்க பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி
  12. விஜித்த பேருகொட – பிரிவெனா கல்வி
  13. லொஹான் ரத்வத்தே – பெருந்தோட்ட கைத்தொழில்
  14. தாரக்க பாலசூரிய – வௌிவிவகாரம்
  15. ஜகத் புஷ்ப குமார – வௌிநாட்டு வேலைவாய்ப்பு
  16. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
  17. சிறிபால கம்லத் – பெருந்தெருக்கள்
  18. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி
  19. சாந்த பண்டார – ஊடகத்துறை
  20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்
  21. அனூப பஸ்குவல் – சமூக வலுவூட்டல்
  22. சிசிர ஜயகொடி – உள்நாட்டு மருத்துவம்
  23. பியல் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில்
  24. பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சி
  25. D.V.சானக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு
  26. D.B.ஹேரத் – கால்நடைகள் அபிவிருத்தி
  27. சஷீந்திர ராஜபக்ஸ – நீர்ப்பாசனம்
  28. சீதா அரம்பேபொல – சுகாதாரம்
  29. சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில்
  30. அசோக்க பிரியந்த – உள்நாட்டலுவல்கள்
  31. டயனா கமகே – சுற்றுலாத்துறை
  32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
Spread the love