அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்றிரவு அறிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நேற்று பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய பிரதமராக ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகளை ஆளும், எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகர் முன்னெடுக்கவுள்ளார்.