தேசிய எரிபொருள் அனுமதி பத்திர நடைமுறையின் கீழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீடு ஒவ்வொரு வாகன வகைக்கும் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்து இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய எரிபொருள் அனுமதி பத்திர நடைமுறையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் முழுவதும் QR எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை 4 மணி வரையில் கியூ.ஆர்.முறைக்கு அமைய பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 55 லட்சத்தைக் கடந்திருப்பதாகவும் அமைச்சர் விடுத்துள்ள ருவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.