புத்தாண்டில் நாட்டை திறந்த நிலையில் வைத்திருக்கவும், இயல்பு நிலையில் பராமரிக்கவும் அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 41 பேருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 41 பேர் ஒமிக்ரோன் தொற்றாளர்களில் 7 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களாகும்.
இதுவரையில் இலங்கையில் 49 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, விடுமுறை நாட்களில் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.