தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாகவே அரசாங்கம் தீர்வு காணுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான தலையீடுகளின்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறுமானால் இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடுகள் காணப்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.