புலம்பெயர் தமிழர்கள் சொந்த நாட்டில் முதலீடுகளை செய்யலாம்- ஜனாதிபதி

புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் முதலீடுகளை செய்யலாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது. இதனைப் பற்றி தொடர்ந்து பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளை செய்வதற்கோ அச்சப்பட தேவையில்லை.

அவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும். அதனை உறுதிசெய்யும். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் முன்வைக்கலாம். அவற்றை கவனிக்க அரசு தயாராக இருக்கின்றது. அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love