பெலராஸ்க்கும் தடை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

ரஷ்யாவின் நட்பு நாடுகள் பட்டியலிலுள்ள பெலாரஸ்க்கு குறிப்பிட்ட சில பொருட்களின் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்துக்குத்தடை விதித்தது அமெரிக்கா

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதை எதிர்த்து கடந்த 17 நாட்களாக ரஷ்யாவானது உக்ரைன்மீது கோரத்தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. உக்ரேனும்  தம்மை தற்காத்துக்கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்திவந்து கொண்டிருக்கிறது.

இதேவேளை  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு விதமான தடைகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் நட்பு நாடாகக் கருதப்படும் பெலாரஸிற்கும் ஆடம்பரப்பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை சார்ந்த பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பரப்பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு தடை விதிக்கப்படும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love