பொருளாதார மீட்சி, ஸ்திரப்படுத்தல் தொடர்பில் தூதர்களுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கம்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சி மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர்.

Spread the love