மறைந்த இரண்டாவது எலிசபெத் மகராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வெஸ்ற்மினிஸ்ரர் மண்டபத்திற்கு அருகில் காத்திருக்கின்றனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை உலக நாடுகளின் தலைவர்களும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுவரை சுமார் 500 ராஜதந்திரிகள் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இளவரசர் அன்ரூவும் தனது தாயாராக்கு அஞ்சலி செலுத்தினார். இன்றையதினம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் காலனித்துவ நாடுகளாக காணப்பட்ட பல ஆசிய நாடுகள் நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளன.