எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலைச்சூத்திரத் தின்படி, எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னதாக தெரிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு திருத்தம் அமுல் படுத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அமைச்சு அது தொடர்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது. WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று காலை 88.42 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ள அதேவேளை , Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.91 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.