மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!, இராஜாங்க அமைச்சர் தகவல்

டொலரின் விற்பனை விலை அதிகரிப்புக்கு ஏற்ப மருந்துப் பொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் இணைந்து மருந்துகளை இறக்கு மதி செய்வதற்கும், அதற்கான கடன் வசதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண எச்சரித்துள்ளார். கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளதால் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love