இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் இந்துருவ மற்றும் செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர் இன்று (09) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று (08) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் அறிவித்திருந்தனர். அந்த வேலைநிறுத்தம் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற 72 மணி நேர தொடர்மின்வெட்டை ஒத்ததாக இருக்குமென தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றிரவு சந்திப்பொன்றும் இடம்பெற்றது. அதன்பின்னர், மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) இரவு வெளியிடப்பட்டது. இதனிடையே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.