மீரிகம குருநாகல் நெடுஞ்சாலை திறப்பு

மத்திய அதிவேக நெடுஞசாலையின் இரண்டாம் கட்டமான மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான வீதி இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று(15.01) மக்கள் பாவனைக்காக இந்த பாதையினை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க முக்கியஸ்தர்கள், அரச அதிகாரிகள் கலந்து கொண்ட அதேவேளை மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

40.9 கிலோமீட்டர் நீளமான இந்த வீதி 149 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எந்தவித வெளிநாட்டு உதவிகளுமின்றி முழுக்க முழுக்க இலங்கை தேசிய வங்கிகளின் பங்களிப்போடு, இலங்கையரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த வீதி, இலங்கை கட்டிட நிர்மாண நிறுவனத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியினூடாக மீரிகமையிலிருந்த்து, குருநாகல் செல்வதற்கு 25 நிமிடங்கள் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதரண வாகனங்களுக்கு 250 ரூபாவும், பார ஊர்திகளுக்கு 350 ரூபா மற்றும் 550 ரூபா பெறுமதியும் அறவிடப்படவுள்ளது.

Spread the love