காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விரைவில் விசாரணை செய்து முடிப்பதற்கு விரைவாக வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த யுத்தத்துக்கு முன் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு ஒட்டுக்குழுக்களாலும் சந்தர்ப்பவாத செயற்பாட்டாளர்களாலும் நாட்டிலுருந்து ஒரு தொகை மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டனர். இது சம்பந்தமாக இன்று வரை பேசப்பட்டாலும் இது வரை முடிவு தெரியாத வினாக்களாக வே இவை காணப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவுகளின் நெஞ்சினில் அவர்கள் மரணம் மட்டும் இது தீராத ரணமாகவே உள்ளது என்றால் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இதற்கான விசாரணைக்கமிஷன்கள் ,வேலைத்திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டபின்பும் கூட இது வெறும் புறக்குடத்தில் வார்த்த நீராகியே போனது ஆனால் இன்றுவரை தமிழர் பிதேசங்களில் ஏன் தென்னிலங்கையிலும் காணாமல் போனாருக்காக நியாயங்கேட்டலும் கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணமேயுள்ளன. ஐ.நா. வரை அவரது உறவினர்களின் குமிறல்களோடு கூடிய கண்ணீரும் சென்று திரும்பியதோ என்னமோ, அரசு இதில் தற்போது கூடிய கவனம் எடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு வழியாக தற்போது விசாரணைக்கென 25 சபைகள் நியமிக்கப்பட அரசின் சிபார்சு செய்யப்பட்ட விவகாரம் நீதி அமைச்சின் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை காணாமல் ஆக்கப்படவடோரின் 14988 முறைப்பாடுகளடங்கிய கோப்பு அரசின் பார்வைக்கு வைக்கப்பெற்று அவற்றின்தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு அதுதொடர்பான தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்பதுகாணாமல் போனோர் தொடர்பில் வேலைகளை முன்னெடுக்கும் அலுவலகத்துக்கு நீதியமைச்சு ஆணை வழங்கியுள்ளது. அதற்கமைவாக அமைக்கப்பட்ட 25 அமைச்சரவை அங்கீகரித்த குழுக்களானவை விசாரணைகளைத் துரிதப்படுத்துவதுடன் அதுதொடர்பான முடிவுகளை அலுவகத்துக்கும் நீதியமைச்சுக்கும் முடிவுறுத்தக்கடமைப் பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கமைவாக மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனோர் தொடர்பான பிரதேச கிளை அலுவலகங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கே இக்குழுக்கள் தமது அறிக்கைகளைச்சமர்ப்பிக்க வேண்டியவராகின்றனர். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அசைச்ரவைக் கூட்டத்தில் நீதியமைச்சரினால் சமர்க்கப்பட்ட முன்மொழிவானது அமைச்சரவையால் அங்கிகரித்து வைக்கப்பட்டது.
.