இன்று (29) நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை கைவிடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அதன் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை நேற்று (28) அனுமதி வழங்கியுள்ளது. மேலதிக நேர சேவையை கைவிடவுள்ளதால் காலையில் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன் மாலையில் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது என்பது குறித்து பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.