யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப்பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பற்றாக்குறையான மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Spread the love