ராஜபக்‌ஷர்களினுடன் ரணில் பேச்சுவார்த்தை ..

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,ஆகிய இருவரும் இணைந்து முன்னாள் பிரதமர்ரணில் விக்ரமசிங்கவுடன் தேசிய அரசாங்கமொன்று அமைப்பது சம்பந்தமான பேச்சு வார்த்தையில் ஈடுட்டுள்ளனர்.

அதில் தேசிய அரசாங்கமொன்றுடன் இணைந்து பயணிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தவண்ணமுள்ளன.

நாட்டின்ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பல்களின் காரணமாக நாடு மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய கட்டாயம் காணப்படுவதனால் அதற்காக தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பது சிறப்பானதென்றும் அதில் ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமாக நியமிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஆழும்தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன,

இந்நிலையில் சுறிலங்காபொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்.பிக்கள் ஐவரை நீக்கி அந்த இடத்துக்கு ஐக்கிய தேசிய கட்சிஉறுப்பினர்களை நியகமிக்கவும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்திருந்த போதும் அங்கும்நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே நிதியமைச்சராகத்தொடர்வார் என்றும் தகவல்கள் கசிந்திருந்தன.

ஆனாலும் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தேசிய அரசாங்கமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவைகள் எதுவும் இல்லை யென்றும் அடுத்தகட்டமாக சர்வகட்சி மாநாட்டைக்கூட்டுமாறும் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைக்கூறி வற்புறுத்தி நின்றார், என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

Spread the love