லக்சம்பேர்க்குடன் இலங்கை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்து

இலங்கை லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ-பசிபிக் மந்திரி மாநாட்டின் போதே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

லக்சம்பேர்க் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்னுடனும் அமைச்சர் சப்ரி கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Spread the love