வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா?

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று மேற்கொள்ளப் போவதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நிறைவேற்றுக் குழு கூடி போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அதேவேளை, அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தாம் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. இதனை மீறும் வகையிலேயே 15 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த நிலையிலேயே போராட்டத்தைத் தொடர்வதா கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் நேற்று தெரிவித்துள்ளார்.

Spread the love